ஏழைக்கு ஒரு சட்டம், ராகுல்காந்திக்கு ஒரு சட்டம் இல்லை-அண்ணாமலை 

by Editor / 24-03-2023 11:07:00pm
ஏழைக்கு ஒரு சட்டம், ராகுல்காந்திக்கு ஒரு சட்டம் இல்லை-அண்ணாமலை 


பிரதமர் மோடியை அவதூறாக பேசியதற்கு எதிராக சூரத் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து ராகுல் காந்தியை எம்பி பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்து மக்களவை செயலகம் அறிவித்தது.

இந்நிலையில் தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,  சூரத் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் காங்கிரஸ் முன்னாள் தலைவரும் மக்களவை உறுப்பினராக இருந்த ராகுல் காந்தியின் உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

சட்டம் அனைவருக்கும் பொருந்தும். ஏழை எளியவர்களுக்கு ஒரு சட்டம் எஜமானருக்கு ஒரு சட்டம் என்ற நிலை இல்லை . சட்டம் அனைவருக்கும் சமமானது என்ற அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியை அவதூறாக விமர்சித்ததாக தொடரப்பட்ட வழக்கில் சூரத் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்த நிலையில் அவர் மேல் முறையிட்டிருக்கு செல்லலாம் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது தவிர நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது என கூறவில்லை. ஆகையால் சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே நீதிமன்ற தீர்ப்பளித்த வகையில் தண்டனை பெற்ற எம்பிக்கள் தகுதி நீக்கம்
செய்யப்பட்டுள்ளனர். அதேபோல ராகுல் காந்தியும் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.சாதாரண மனிதனுக்கு ஒரு நீதி, அரச குடும்பத்திற்கு ஒரு நீதி என்று இல்லாமல் அனைவருக்கும் ஒரே நீதி என்ற அடிப்படையில் நாடாளுமன்றத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ராகுல் காந்தி தேர்தலில் போட்டியிடக் கூடாது என இது போன்று நடவடிக்கை எடுக்கவில்லை.  அவர் நிச்சயமாக தேர்தலில் போட்டியிட வேண்டும். அவர் பேச பேச தான் பாரதிய ஜனதா கட்சிக்கு வளர்ச்சி. ராகுல் காந்தி தான் பாஜகவின் பிராண்ட் அம்பாசிட்டர் என்று  அண்ணாமலை தெரிவித்தார்.

 

Tags : bjp annamalai

Share via