திமுக பேரணியில் கவுன்சிலர் மரணம்

by Staff / 07-08-2023 03:17:59pm
திமுக பேரணியில் கவுன்சிலர் மரணம்

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் திமுகவினரால் கொண்டாடப்படுகிறது. முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் 5ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைதி பேரணி சென்னை ஓமந்தூரார் வளாகம் முதல் அண்ணா சதுக்கத்தில் உள்ள கலைஞர் நினைவிடம் வரை அமைதி பேரணி நடைபெற்றது. இதில் பங்கேற்றபோது மயங்கி விழுந்த சென்னை 146வது வார்டு மாமன்ற உறுப்பினர் சண்முகம் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இவர் மாரடைப்பால் மயங்கி விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

 

Tags :

Share via

More stories

Logo