நம்பிக்கையில்லா தீர்மானம் - தயாராகும் ராகுல்

by Staff / 07-08-2023 02:39:31pm
நம்பிக்கையில்லா தீர்மானம் - தயாராகும் ராகுல்

ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டுகள் தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்திவைத்த நிலையில் ராகுல் காந்திக்கு மீண்டும் எம்.பி பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், எம்.பி. பதவியை திரும்பப் பெற்றதை தொடர்ந்து ராகுல்காந்தி நாடாளுமன்றம் திரும்பினார். நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மக்களவையில் நாளை விவாதம் தொடங்குகிறது. அதன்படி, தகுதி நீக்கம் திரும்ப பெற்ற நிலையில், நாளை தொடங்கவுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி பங்கேற்பார் என தகவல் வெளியானது. இந்நிலையில், மணிப்பூர் விவகாரம் குறித்து சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கேவுடன் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தி வருகிறார்.

 

Tags :

Share via

More stories

Logo