பழனி முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள்
உலக பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். மாத கிருத்திகை, சஷ்டி உள்ளிட்ட விசேஷ நாட்களில் பக்தர்கள் வருகை அதிகரிப்பது வழக்கம். குறிப்பாக வார விடுமுறை நாட்களில் கேரளா உள்ளிட்ட வெளிமாநில பக்தர்கள் அதிகளவில் பழனிக்கு வருகை தருகின்றனர். அந்த வகையில், நேற்று சன்னதிக்கு செல்லும் பொது, கட்டண தரிசன வழிகளில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்திருந்தனர். சுமார் 1½ மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கடும் வெயில் நிலவியதால், பக்தர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர்.
Tags :