பலாத்காரம் செய்தவர்கள் மீது புகார் அளித்ததால் சிறுமிக்கு நேர்ந்த கதி
உத்தரபிரதேசம்: சீதாபூர் மாவட்டம் சந்தனா பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை சிலர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சிறுமி தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான நீதிமன்ற விசாரணைக்காக ஆக. 18ஆம் தேதி சிறுமி தனியாக நீதிமன்றத்திற்கு சென்றுள்ளார். சென்றவர் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் போலிஸில் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலிஸாருக்கு காசிபூர் பிஹ்டா கிராமத்தில் உள்ள கால்வாயில் ஒரு சிறுமியின் சடலம் கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. உடனே அங்கு சென்ற போலிஸார் அந்த சடலம் காணாமல் போன சிறுமியின் சடலம் என்பதை கண்டுபிடித்தனர். சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள்தான் சிறுமியை கொலை செய்துள்ளதாக அவரின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். இதைத் தொடர்ந்து சிறுமி காணாமல்போன வழக்கை கொலை வழக்காக மாற்றி குற்றவாளிகளை போலிஸார் தேடி வருகின்றனர்.
Tags :