கர்நாடக பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது..

by Admin / 01-05-2023 03:01:24pm
கர்நாடக பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது..

கர்நாடக சட்டசபை தேர்தல் வரும் பத்தாம் தேதி நடைபெறும் நிலையில் பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இன்று காலை பாஜக தலைவர் ஜே. பி. நட்டா தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். உடன் கர்நாடக முதலமைச்சர் பிரசவராஜ் பொம்மை, முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா ஆகியோ உடன் இருந்தனர் .ஏற்கனவே காங்கிரஸ் கட்சி 200 யூனிட் இலவசம் மின்சாரம் பெண்களுக்கு 2000 அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் உள்ளிட்ட ஐந்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிற நிலையில், பாஜகவும் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதன்படி வறுமை கோட்டுக்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு யுகாதி விநாயக சதுர்த்தி தீபாவளி ஆகிய மாதங்களில் மூன்று எரிவாயு உருளைகளை இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது .அதனோடு காவல்துறையில் மதம் சார்ந்த பயங்கரவாதத்திற்கு எதிராக சிறப்பு பிரிவு ஒன்று ஏற்படுத்தப்படும் என்றும் ஏழைகளுக்கு போசன் போஜா திட்டத்தின் கீழ் 10 கிலோ தானியங்களும் வழங்கப்படும் என்றும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்ற அறிவிப்போடு விதவைப் பெண்களுக்கு மாதம் 2000 ரூபாயாக ஓய்வூதியம் வழங்கப்படும். காசி அயோத்தி திருப்பதி போன்ற புனித ஸ்தலங்களுக்கு யாத்திரை செல்பவர்களுக்கு ஒருமுறை 25 ஆயிரம் ரூபாய் மானியமாக வழங்குவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் உள்ள புராதான கோயில்களை சீரமைக்கவும் பராமரிக்கவும் நிதி  ஒதுக்கப்படும் என்றும் 5 லட்சமாக இருக்கிற ஆயுசுமான் பாரத் போஜனா திட்ட காப்பீட்டு தொகை 10 லட்சமாக உயர்த்தப்படும் என்றும் கர்நாடகாவில் உள்ள அனைத்து தாலுகாக்களிலும் டயாலிஸ் ஹீமோதெரபி துணை மருத்துவ நிலையங்கள் அமைக்கப்படும் என்றும் கர்நாடக முழுவதும் தரமான மலிவான உணவு வழங்குவதற்காக ஆகார கேந்திரா ஒவ்வொரு மாநகராட்சியிலும்  அமைக்கப்படும் என்றும் வீடற்றவர்களுக்கு 10 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும் என்றும் மூத்த குடிமக்களுக்கு வருடாந்திர சுகாதார பரிசோதனை நடத்தப்படும் என்றும் தங்களுடைய தோ்தல் அறிக்கையில் அறிவிப்புக்களை கர்நாடகா பாஜக வெளியிட்டுள்ளது.

கர்நாடக பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது..
 

Tags :

Share via