சேலம் வழியாக சிறப்பு ரயில் இயக்கம்

by Staff / 01-05-2023 03:00:11pm
சேலம் வழியாக சிறப்பு ரயில் இயக்கம்


ரயில்களில் பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக ரயில்வே நிர்வாகம் சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. அந்த வகையில் கோடை விடுமுறையையொட்டி கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் இருந்து சேலம் வழியாக தஞ்சாவூருக்கு சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. ஹூப்ளி - தஞ்சாவூர் வாராந்திர சிறப்பு ரயில் (வண்டி எண் 07325) ஹூப்ளியில் இருந்து இன்று (திங்கட்கிழமை) இரவு 9. 47 மணிக்கு புறப்பட்டு பெங்களூரு, கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை வழியாக மறுநாள் காலை 9. 25 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 9. 30 மணிக்கு புறப்பட்டு கரூர், திருச்சி, பூதலூர் வழியாக மதியம் 2. 15 மணிக்கு தஞ்சாவூர் சென்றடையும்.இந்த ரயிலுக்கான சேவை காலம் வருகிற 29-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கத்தில் இயக்கப்படும் தஞ்சாவூர்- ஹுப்ளி வாராந்திர சிறப்பு ரயில் (வண்டி எண் 07326) தஞ்சாவூரில் இருந்து நாளை (செவ்வாய்க்கிழமை) இரவு 7. 40 மணிக்கு புறப்பட்டு பூதலூர், திருச்சி, கரூர் வழியாக இரவு 11. 45 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 11. 50 மணிக்கு புறப்பட்டு பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம், பெங்களூரு வழியாக மறுநாள் மதியம் 12. 30 மணிக்கு ஹூப்ளி சென்றடையும். இந்த ெmரயிலுக்கான சேவை வருகிற 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனை பயணிகள் சிறப்பாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். இந்த தகவல் சேலம் ரயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

Tags :

Share via