ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ஆதரவு: செல்லுார் ராஜூ பேட்டி
ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ஆதரவு: மதுரையில் கோரிப்பாளையம் பகுதியில் நேற்று செல்லுார் ராஜூ பேட்டி ஒரே நாடு ஒரே தேர்தலை 1971 ல் கருணாநிதியே வரவேற்றுள்ளார். அதை நானும் வழிமொழிகிறேன், '' என முன்னாள் அமைச்சர் கூறினார். லோக்சபா தேர்தல் பூத்கமிட்டி அமைக்க அ. தி. மு. க. , ஆலோசனை கூட்டம் மதுரையில் நடந்தது. தலைமை வகித்த செல்லுார் ராஜூ கூறியதாவது: ஆளுங்கட்சியே சேலத்தில் இளைஞர் எழுச்சி மாநாடு நடத்தும் அளவுக்கு அதிர்ச்சி வைத்தியத்தை அ. தி. மு. க. , மாநாடு கொடுத்துள்ளது. சனாதனம் என்ற வார்த்தையை தி. மு. க. , தனது தவறுகளை மறைப்பதற்காக பயன்படுத்துகிது. இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜியை நீட்டிக்க வைப்பது சரியா. கொள்கைக்காக பாடுபடுவோம் எனக்கூறிய தி. மு. க. , 1999 ல் பா. ஜ. , வுடன் கூட்டணியில் இருந்தபோது என்ன ஆனது. தி. மு. க. , ஆதரித்தால் சமதர்மம், எதிர்த்தால் சனாதனமா. இதில் தி. மு. க. , இரட்டைவேடமிடுகிறது. சிறுபான்மையினர் ஓட்டுக்களை பெறுவதற்கான நாடகம் இது. பா. ஜ. , கூட்டணியில் இடம்பெறவில்லை என்றால் அ. தி. மு. க. , வெற்றி பெறும் என்ற கருத்து தவறானது. ஒரே நாடு ஒரே தேர்தலை 1971ல் அப்போதைய முதல்வர் கருணாநிதியே வரவேற்றுள்ளார். அதை நானும் வழி மொழிகிறேன். மதுரையில் ரோடுகள் மோசமாக உள்ளதற்கு மாநகராட்சி, தமிழக அரசை கண்டித்து போராட்டம் நடைபெறும் , என்றார்.
Tags :