லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த 2 பேர் கைது, ரூ.6,500 மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள், ரூ.20 ஆயிரம் பணம் பறிமுதல்.
திண்டுக்கல் புறநகர் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது வக்கம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த பேகம்பூர் பகுதியை சேர்ந்த அபுதாகிர்(42), முகமதுபாரூக்(38) ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.6,500 மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள், ரூ.20 ஆயிரம் பணம், 1 செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்து தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Tags : திண்டுக்கல் அருகே லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த 2 பேர் கைது, ரூ.6,500 மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள், ரூ.20 ஆயிரம் பணம் பறிமுதல்