"காவிரியில் உரிய நீரை பெற உடனடி நடவடிக்கை தேவை" பாமக நிறுவனர் ராமதாஸ்

காவிரியில் உரிய நீரை பெற உடனடி நடவடிக்கை தேவை என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக மேலும் அவர், "மத்திய அரசு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தை அணுகி, தமிழ்நாட்டிற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடும்படி வலியுறுத்த வேண்டும். டெல்டா விவசாயிகளை காப்பாற்ற வேண்டும். குறுவை சாகுபடி பரப்பை அதிகரிக்கவும், சம்பா சாகுபடி பணியை தொடங்கவும் காவிரியில் தண்ணீரை பெற தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
Tags :