கேஸ் விபத்து- நொடிப்பொழுதில் உயிர் பிழைத்த இளைஞர்

by Staff / 05-07-2024 03:09:43pm
கேஸ் விபத்து- நொடிப்பொழுதில் உயிர் பிழைத்த இளைஞர்

கேரள மாநிலம் கோழிக்கோடில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் இளைஞர் ஒருவர் கண்ணிமைக்கும் நேரத்தில் உயிர் பிழைத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. முதல்குளத்தில் உள்ள டீக்கடையில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அந்த கடையில் 2 பேர் இருந்துள்ளார். அதில் ஒரு இளைஞர் பற்றி எரிந்த கடையில் இருந்து எகிறி குதித்து வெளியேறி உள்ளார். அவர் வெளியேறிய சில நொடிகளில் கடையில் இருந்த கேஸ் சிலிண்டர் வெடித்துச் சிதறியது. உள்ளே இருந்த 2-வது நபர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

Tags :

Share via