“மோடி முதுகில் குத்தியவர் இபிஎஸ்' - அண்ணாமலை ஆவேசம்
விழுப்புரம் திருவாமாத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலையிடம் எடப்பாடி பழனிசாமி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “தமிழக மக்களுக்கு நல்லாட்சி கொடுப்பதற்காக பாஜக இருக்கு. உங்களை (இபிஎஸ்) அங்கீகாரம் செய்த பிரதமர் மோடியிடம் என்ன சொன்னீர்கள்? முதுகில் குத்துனீர்கள் அதுதான் நீங்கள் கொடுத்த பரிசு. ஆகையால், நம்பிக்கையைப் பற்றி பாஜக கட்சிக்கும் எனக்கும் இபிஎஸ் பாடம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. காரணம், அவருக்கு அந்த அருகதை இல்லை” என்றார்.
Tags :