இந்தியாவில் 100 பில்லியன் டாலர் ஏ ஐ தயார் தரவும் மையங்களை அதானி குடும்பம் 2035க்குள் அமைக்கப்பட உள்ளது.

by Admin / 18-02-2026 08:52:54am
இந்தியாவில் 100 பில்லியன் டாலர் ஏ ஐ தயார் தரவும் மையங்களை அதானி குடும்பம் 2035க்குள் அமைக்கப்பட உள்ளது.

இந்தியாவில் 100 பில்லியன் டாலர் ஏ ஐ தயார் தரவும் மையங்களை அதானி குடும்பம் 2035க்குள் அமைக்கப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தத் திட்டம் தற்போது 2ஜி கா வாட் தரவு மையத் திறனை 2035க்குள் 5 ஜிகாவாட் ஆக உயர்த்த இலக்கு வைத்துள்ளது .இந்த நூறு மில்லியன் டாலர் முதலீடு சர்வர் தயாரிப்பு மற்றும் கிளவுட் தளங்கள் போன்ற தொடர்புடைய துறைகளில் மேலும் 150 பில்லியன் டாலர் முதலீட்டை தூண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இந்தியாவில் மொத்தம் 250 பில்லியன் டாலர் மதிப்புலான ஏ ஐ உள் கட்டமைப்பு உருவாக்கப்படும்சூழல் உருவாகியுள்ளது .இந்த தரவு மையங்கள் அதானியின் 30 gw  புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டம் போன்ற பசுமை ஆற்றல் மூலங்களை கொண்டு இயங்கக்கூடியதாக அமைக்கப்பட உள்ளது. இந்த மெகா திட்டத்திற்காக அதானி குழுமம் ஏற்கனவே கூகுள், மைக்ரோசாப்ட் மற்றும் பிலிப்கார்ட் ஆகியவற்றுடன் முக்கிய ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது. எரிசக்தி மற்றும் கணினி திறன் ஆகிய இரண்டையும் கட்டுப்படுத்தும் நாடுகளை எதிர்காலத்தை வழிநடத்தும் என்று அதானி குடும்பத் தலைவர் கௌதம் அதானி குறிப்பிட்டுள்ளார். இந்த அறிவிப்பின் மூலம் மும்பை பங்குச்சந்தையில் அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் 2.7 சதவீதம் உயர்ந்தன.

இந்தியாவில் 100 பில்லியன் டாலர் ஏ ஐ தயார் தரவும் மையங்களை அதானி குடும்பம் 2035க்குள் அமைக்கப்பட உள்ளது.
 

Tags :

Share via