கார் மோதி விபத்து- கணவன் மனைவி பலி
கிணத்துக்கடவு அண்ணாநகர் பகுதியில் வசித்து வந்தவர் வேலுச்சாமி, இவரது மனைவி சாந்தி இருவரும் நேற்று மாலை இரு சக்கர வாகனத்தில் கிணத்துக்கடவு அருகே உள்ள சொக்கனூர் பகுதியில் உள்ள தோட்டத்திற்கு சென்று கொண்டு இருந்தனர்.சிங்கையன்புதூர் பகுதி அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வேகமாக வந்த கார் வேலுச்சாமி ஓட்டி சென்ற இரு சக்கர வாகனம் மீது மோதியது.இதில் பலத்த காயமடைந்த வேலுச்சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சாந்தியை மீட்ட அக்கம் பக்கத்தினர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பெற்று வந்த சாந்தி இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் இது குறித்து தகவல் அறிந்து சென்ற கிணத்துக்கடவு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Tags :



















