குற்றால பேரருவியில் சுற்றுலா பயணிகள் ஓரத்தில் நின்று குளிக்க அனுமதி.
தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் விடிய..விடிய.. பெய்த கனமழை காரணமாக குற்றாலம் பேரருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க கடந்த 2 நாட்கள் தடை விதிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக கடந்த இரண்டு நாட்களாக சுற்றுலா பயணிகள் குற்றாலம் பேரருவியில் குளிப்பதற்கு தடை நீடிக்கப்பட்டது மேலும் நேற்று நீர்வரத்து கொஞ்சம் குறைந்ததால் சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பாட்டை நிலையில் நேற்று இரவு முதல் அதிகாலைவரை பெய்த மழையின் காரணமாக பாதுகாப்பு வளையத்தை தாண்டி தண்ணீர் கொட்டி வருவதால் சுற்றுலா பயணிகள் அந்தப் பகுதியில் குளிப்பதற்கு தடை நீடித்து வருகிறது.குற்றாலம் பேரருவியின் ஓரத்தில் நின்று குளிப்பதற்கு காவல்துறையினர் அனுமதி அளித்துள்ளதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் திரண்டு வந்து குளித்து சென்ற வண்ணம் உள்ளனர் மேலும் பாதுகாப்பு வளையத்தை ஒட்டியுள்ள இரண்டு பகுதிகளிலும் தடுப்பு வழிகள் வைத்து அடைத்து வைக்கப்பட்டுள்ளது வனப்பகுதியில் நீர்வரத்து குறைந்தால் மட்டுமே குற்றாலம் பேரருவியில் முழுமையான பகுதிகளில் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
Tags : குற்றால பேரருவியில் சுற்றுலா பயணிகள் ஓரத்தில் நின்று குளிக்க அனுமதி.