பா.ஜ.க தலைமையிலான கூட்டணி 115க்கும் மேற்பட்ட வார்டுகளில் முன்னிலை

by Admin / 16-01-2026 04:57:08pm
 பா.ஜ.க தலைமையிலான கூட்டணி 115க்கும் மேற்பட்ட வார்டுகளில் முன்னிலை

பெரும் எதிர்பார்ப்புக்கிடையே மும்பை மாநகராட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. பாஜக-ஏக் நாத் ஷிண்டே தலைமையிலான மகாயுதி கூட்டணி பெரும்பான்மை இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றது. .227 வார்டுகளை கொண்ட மும்பை மாநகராட்சியில் 114 இடங்கள் பெற்றுள்ள கட்சியே நிர்வாகத்தை கைப்பற்றும். அந்த வகையில் பா.ஜ.க தலைமையிலான கூட்டணி 115க்கும் மேற்பட்ட வார்டுகளில் முன்னிலை பெற்று பெரும்பான்மைக்கு அதிகமான இடங்களை கடந்து வருகிறது. உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா மற்றும் காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணி 70 இலிருந்து 75 வரை முன்னிலை பெற்றுள்ளது.. பா.ஜ.கவை சேர்ந்த தேஜஸ்வினி கோடல்கர், அஜய் பாட்டில் ,பிரகாஷ் த ரேகர் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். சிவசேனா சார்பாக போட்டியிட்ட ரேகா யாதவ், வர்ஷா ,சைலஜாஷிண்டே ஆகியோரும்  சிவசேனா யு .பி. டி அணியின் சுனில் மோர் , நிசிகாந்த் ஆகியோரும் வெற்றி பெற்றுள்ளனர். காங்கிரஸ் சார்பாக ஆஷா  தாராவியில் 183 வது வார்டில் வெற்றி பெற்றுள்ளார். மும்பை மாநகராட்சியை 30 ஆண்டுகளாக தம் கட்டுப்பாட்டில் வைத்திருந்த  உத்தவ் தாக்கரே சிவசேனா ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு, இப்பொழுது பாரதிய ஜனதாவை நோக்கி அதிகாரம் செல்ல உள்ளது.. மத்தியிலும் பாஜக ஆட்சி, மாநிலத்திலும் பாஜக ஆட்சி ,மாநகராட்சியிலும் பாஜக ஆட்சி என வலுவான நிலையை நோக்கி செல்கிறது ,பாஜக.

 

Tags :

Share via