பாறை உடைக்க வெடி பொருள் பயன்படுத்திய 2 பேர் கைது

by Staff / 21-02-2023 03:36:59pm
பாறை உடைக்க வெடி பொருள் பயன்படுத்திய 2 பேர் கைது

குலசேகரம் அருகே மணியன்குழி, காக்கச்சல் பகுதியில் தனி்யார் ஒருவரது இடத்தில் கிணறு வெட்டும் பணிகள் நடந்து வருகிறது. இந்தப் பணிகளை மங்க லம், செக்குமூடு பகுதி யைச் சேர்ந்த ஜெய தீப ராஜ் (வயது 53), மற்றும் மாத்தூர், குறக்குடியைச் சேர்ந்த ஜெஸ்டின்ராஜ் (45) உள்ளிட்டோர் செய்து வந்தனர். இந்நிலையில் கிணறு வெட்டும்போது உள்ளே பாறை இருந்தது இதனால் அதனை உடைக்க வேண்டும் என்ற நிலையில் டெட்டனேட்டர், வெடி உப்பு போன்ற பொருள்களை பயன்படுத்தி உள்ளனர்.இது குறித்து வெடிபொ ருள் தடுப்பு பிரிவு போலீ சாருக்கு ரகசிய தகவல் கள் கிடைத்தது. அவர் கள் விரைந்து வந்து ஜெய தீபராஜ் மற்றும் ஜெஸ்டின்ராஜ் ஆகியோரை கைது செய்த துடன், அவர்களிடமிருந்து வெடிப்பொருள்களையும் பறிமுதல் செய்தனர். அவர்கள் 2 பேரையும் குலசேகரம் போலீஸ் நிலை யத்தில் ஒப்படைத்தனர். குலசேகரம் போலீசார் அவர்கள் மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வரு கிறார்கள்.

 

Tags :

Share via