2 முறை ஓட்டு போட முயற்சி - அலேக்கா தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தீவிரமாக நடைபெற்று முடிந்தது. இந்நிலையில், கோயம்புத்தூர் மாவட்டம் நல்லாம்பாளையம் வாக்குச்சாவடிக்கும் இரண்டாவது முறை வாக்களிக்க வந்த நபர் போலீசிடம் சிக்கினார். திருநாவுக்கரசு என்பவர் வாக்கு செலுத்த சென்றபோது வலது கை விரலில் மை வைக்கக் கோரி வாக்குவாதம் செய்தார். அப்போது இவர் ஏற்கனவே வாக்கு செலுத்தியது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அங்கிருந்த போலீசார் அவரை இழுத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
Tags :