முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் க. சுந்தரம் இன்று காலமானார். முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேரில் அஞ்சலி.

by Admin / 18-09-2024 09:12:35pm
முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் க. சுந்தரம் இன்று காலமானார். முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேரில் அஞ்சலி.

முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் க. சுந்தரம் இன்று காலமானார்..1989 ,1996இரண்டு முறை. பொன்னேரி சட்டமன்ற உறுப்பினராகவும் திமுக ஆதி திராவிடர் நல பிரிவு தலைவராகவும் பால்வளத்துறை அமைச்சராகவும் இருந்த  க. சுந்தரம் வயது முதிர்வின் காரணமாக இன்று அவரது இல்லத்தில் காலமானார். அவரின் உடலுக்கு இன்று தமிழக முதலமைச்சர் மு .க .ஸ்டாலின் நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். கடந்த ஆண்டு திமுக வேலூரில் நடத்திய முப்பெரும் விழாவில் இவருக்கு அண்ணா விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via