ரசிகர்கள் பத்து நாட்களுக்கு மேல் எந்த படத்தையும் பார்ப்பதில்லை, அவர்களுக்கு சலித்து போய்விடுகிறது-முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி

by Admin / 18-09-2024 08:50:44pm
ரசிகர்கள் பத்து நாட்களுக்கு மேல் எந்த படத்தையும் பார்ப்பதில்லை, அவர்களுக்கு சலித்து போய்விடுகிறது-முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி

ரசிகர்கள் பத்து நாட்களுக்கு மேல் எந்த படத்தையும் பார்ப்பதில்லை, அவர்களுக்கு சலித்து போய்விடுகிறது.

.நம்ம கிட்ட தான் இன்னைக்கு கிரிக்கெடஇளைஞர்கள் நல்ல புத்தகங்களை படிக்க வேண்டும்..சேகுவாரா, நேதாஜி, பசும்பொன் முத்து ராமலிங்க தேவர், டாக்டர் அம்பேத்கார் வரலாறுகளை படியுங்கள்.. - கோவில்பட்டியில் முன்னால் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் விஸ்வகர்ம மகாஜன சங்கம் சார்பில்  விஸ்வகர்ம தொழிலாளர் சங்கம் மற்றும் விஸ்வகர்மா நகை தொழிலாளர்கள் சங்கம் இணைந்து விஷ்வப்பிரம்ம ஜெயந்தி விழா மற்றும் ஆராதனை விழாவை வெகு விமர்ச்சையாக நடத்தினர்.

. இந்த நிகழ்ச்சியில் அதிகாலை விஸ்வகர்மா சிலைக்கு பால் ,பன்னீர் 18 வகையான அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. ஐந்தொழிலாளர்கள் தொழிலை சித்தரிக்கும் வகையில் விஸ்வகர்ம பகவான் ரத யாத்திரை மேள தாளத்துடன் வெகு விமர்சியாக நடைபெற்றது.. விஸ்வப் பிரம்ம விழாவுக்கு  முன்னாள்  அமைச்சர்கள் கே டி ராஜேந்திர பாலாஜி,,கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்துகொண்டு சுதந்திர போராட்ட தியாகி வா. சிவராமலிங்கம் ஆச்சாரி திருவுருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி  ரத யாத்திரையை கொடியசைத்து துவக்கி துவக்கி வைத்தார்கள்..விழாவில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி உரையாற்றுகையில,

இன்றைக்கு திரைப்படம் ஒரு வாரம் ஓட வேண்டும் என்றால் ரொம்ப கஷ்டப்படுறாங்க ரசிகர்கள் பத்து நாட்களுக்கு மேல் எந்த படத்தையும் பார்ப்பதில்லை, அவர்களுக்கு சலித்து போய்விடுகிறது ஆனால் தென்னகத்தின் சூப்பர் ஸ்டார் எம் கே. தியாகராஜர் பாகவதர் நடித்த ஹரிதாஸ் திரைப்படம் மூன்றாண்டுகள் ஓடி சாதனை படைத்தது . அந்தச் சாதனையை எந்த நடிகரும் இது தற்போது வரை முறியடிக்கவில்லை. நான் பார்த்து வியந்த நடிகர் எம். கே.தியாகராஜ பாகவதர்  அன்று எம்ஜிஆர் குறிப்பிட்டிருந்தார் .விஸ்வகர்மா சமூகத்திற்கு அரசியல் அங்கீகாரம் கொடுத்தது அதிமுக தான். என்றைக்கும் விஸ்வகர்மா சமூக மக்கள் அதிமுகவிற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் விஸ்வகர்மா மக்கள், இளைஞர்கள் யாரை ஆதரிக்கிறார்களோ அவர்கள் ஆட்சிக்கு வர வேண்டும். அதிமுக ஆட்சிக்கு வேண்டும், மக்கள் போற்றுகின்ற நல்லாாட்சி வர வேண்டும்அனைத்து சமூக மக்களுடன் ஒற்றுமையாக இருக்க வேண்டும், அனைவரும் போற்றும்  வகையில் நடந்து கொள்ள வேண்டும்.  நம்முடைய இலக்கு அரசியல் அங்கீகாரம் பெறுவது தான் விஷ்வ கர்மா என்ற பெயரில் பெரிய பாடத்தை இந்த நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்துள்ளார் கேரளா குஜராத் மகாராஷ்டிரா மாநிலங்களில் விஸ்வகர்மா சமூகத்திற்கு இட ஒதுக்கீடு உள்ளது தமிழகத்தில் நாம் ஒற்றுமையாக இருந்தால்தான் நாம் நினைத்த காரியத்தை நிறைவேற்ற முடியும் விஸ்வகர்மா சமூகத்திற்கு என்று வரலாறு உண்டு நியாயத்திற்காக போர்க்களத்தில் சண்டையிடுபவர்களுக்கு  வாள், வேல், கத்தி ஆகியவற்றை அடித்துக் கொடுப்பவர்கள் நாம்அடித்து கொடுப்பவர்களுக்கு கையில் எடுக்கத் தெரியாதா?கையில் எடுக்கின்ற வாளை வீச தெரியாதா வீசுகின்ற வாள்  நம்மை எதிர்ப்பவர்களின் தலையை கொய்யாதா? நம்மை எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் எவராக இருந்தாலும் சரித்திரத்தில் இருக்க விடாமல்  ஆக்குவோம் நம்மை நம்புபவர்களுக்கு உயிரை கொடுப்போம், நம்மை ஏமாற்ற நினைத்தால், நம்மை ஒடுக்க நினைத்தால் , நம்மை ஓரங்கட்ட நினைத்தால் அதற்கான விலையை சம்பந்தப்பட்டவர்கள் கொடுக்க வேண்டிய வரும் என்பதை உணர்த்தும் வகையில் நமது பயணம் இருக்க வேண்டும் தமிழகத்தில் நகை கடை வைத்திருக்கும் உரிமையாளர்களிடம் பொய்யான  புகார் மூலமாக போலீசார் மிரட்டும் நிலை தற்போது உள்ளது. அதிமுக ஆட்சியில் நான் அமைச்சராக இருந்தபோது தடுக்கப்பட்டது ராஜராஜசோழன் கட்டிய தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் ஆலயம் ஆயிரம் ஆண்டுகளை கடந்து இன்றும் நிற்கிறஅங்குள்ள கோபுரத்தின் மேல் எண்பது டன் கல்லை எப்படி வைத்தார்கள் என்பது யாருக்கும் தெரியவில்லை ராஜராஜசோழன் சொன்னான் செய்தது ஒரு சிற்பி என்று. அந்த சிற்பியை பாராட்டி தங்க நகைகளையும் பரிசாக வழங்கினார் . இதுவரலாறு-விஸ்வகர்மா மக்கள் கடவுள் நம்பிக்கை உடையவர்கள் ..அனைத்து கடவுள்களையும் வணங்குவது மட்டுமின்றி, மற்ற மதங்களையும் மதித்து வழங்க கூடியவர்கள். மிலாடி நபியை  முன்னிட்டு திமுக கூட்டணி இருக்கும் கட்சியை சேர்ந்த ஒரு இஸ்லாமிய சகோதரர் இன்றைக்கு எனக்கு இனிப்பு வழங்க வந்தார். நானும் அவரும் ஒருவருக்கொருவர் மாறி மாறி இனிப்பு வழங்கிக் கொண்டோம் .அவர் திமுக கூட்டணியில் இருப்பது நமக்கு நல்லது தான், அங்கு நடப்பதை சொல்வதற்கு ஒரு ஆள் வேண்டும் கிரிக்கெட் விளையாட்டு  விஸ்வகர்மா சமூக மக்கள் உருவாக்கிய கிட்டில் தான் வந்தது உங்க ஊர்ல சில்லாங்குச்சின்னு சொல்லுவீங்க எங்க ஊர்ல கிட்டினு சொல்லுவோம் அந்த கிட்டி  தான் இன்னைக்கு கிரிக்கெட் இளைஞர்கள் நல்ல புத்தகங்களை படிக்க வேண்டும் சேகுவாரா, நேதாஜி, பசும்பொன் முத்து ராமலிங்க தேவர், டாக்டர் அம்பேத்கார் வரலாறுகளை படியுங்கள் சேகுவாரா, பிடில் காஸ்ட்ரோ பட்ட கஷ்டங்களை நாம் படித்தால் நமக்கு ஒரு தைரியம் வரும், தன்னம்பிக்கை வரும் என்றார்.தொடர்ந்து விஸ்வப் பிரம்ம ஜெயந்தி விழாவை முன்னிட்டு மேளதாளம் முழங்க வெகு சிறப்பாக நடைபெற்ற ஊர்வலத்தை முன்னாள் அமைச்சர்கள் கே டி ராஜேந்திர பாலாஜி, கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு கொடி அசைத்து தொடங்கி வைத்தார். காந்தி மைதானத்தில் துவங்கி பார்க் ரோடு, அண்ணா பேருந்து நிலையம், புதுரோடு சாலை வழியாக மீண்டும் காந்தி மைதானம் வந்தடைந்தது. விழாவிற்கு விஸ்வகர்மா ஜெயந்தி விழா குழு தலைவர் பாலமுருகேசன் தலைமை வகித்தார்.மாடசாமி, முருகேசன், ஆகியோர் முன்னிலை வைத்தனர். நிகழ்வில் பாலசுப்பிரமணியன் வரவேற்புரை வழங்கினார். பால் சாமி, ராஜமாணிக்கம், ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவில் நிறைவாக  காளியப்பன் ரத யாத்திரையில் 600க்கும் மேற்பட்ட விஸ்வகர்மா தொழிலாளர்கள் தனது குடும்பத்துடன் வந்து கலந்து கொண்டனர்.விஸ்வகர்ம ஐந் தொழிலாளர்கள், தொழில்களை சித்தரிக்கும் வகையில் மேளதாளம் முழங்க ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

 

ரசிகர்கள் பத்து நாட்களுக்கு மேல் எந்த படத்தையும் பார்ப்பதில்லை, அவர்களுக்கு சலித்து போய்விடுகிறது-முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி
 

Tags :

Share via