பாலியல் புகாரளித்த 16 வயது சிறுமிக்கு அரிவாள் வெட்டு

சென்னை கொருக்குப்பேட்டையில் 16 வயது சிறுமி அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட மதன் குமார் என்பவர் கடந்த 16ம் தேதி போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், தனது தம்பி மீது புகாரளித்ததால், சிறுமியை இன்று பின்தொடர்ந்த அண்ணன் பாபு, கூட்டாளிகளுடன் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினார். இதையடுத்து, படுகாயமடைந்த சிறுமி ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Tags :