உலக கால்பந்தாட்ட வீரர் அர்ஜென்டினா லியோனல் மெஸ்ஸி மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.
உலக கால்பந்தாட்ட வீரர் அர்ஜென்டினா லியோனல் மெஸ்ஸி மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். கோட் இந்தியா டூர் 2025 சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இன்று அதிகாலை கொல்கத்தா விமான நிலையம் வந்து அடைந்தார். அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கொல்கத்தா ,ஹைதராபாத், மும்பை மற்றும் புது டெல்லி ஆகிய நான்கு நகரங்களுக்கு அவர் செல்ல உள்ளார். அவர் சுற்றுப்பயணத்தில் இந்திய களத்தில் ரசிகர்களுக்காக கால்பந்தாட்ட விளையாட்டை விளையாட உள்ளார். அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்வதற்கான நிலைப்பாடும் வகுக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 10 லட்சம் ரூபாய் செலுத்தி அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது. அவர் விளையாடும் விளையாட்டை ரசிகர்கள் பார்ப்பதற்கு 2,500 முதல் 10 ஆயிரம் ரூபாய் வரையிலான டிக்கெட் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அவர் தனது பயணத்தின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியையும் கொல்கத்தா முதலமைச்சர் மம்தா பானர்ஜி, நடிகர் ஷாருக்கான் போன்றவர்களோடு சந்திப்பு நிகழ உள்ளது. கொல்கத்தாவில் உள்ள லாக்டோன் பகுதியில் 70 அடி உயரமுள்ள மெஸ்ஸியின் பிரமாண்ட சிலை நிறுவப்பட்டுள்ளது .அதை அவர் காணொளி காட்சி வாயிலாக திறக்க உள்ளார்.
Tags :


















