மாடியிலிருந்து குதித்து இளம்பெண் தற்கொலைக்கு முயற்ச்சி

by Staff / 29-04-2023 12:25:35pm
மாடியிலிருந்து குதித்து  இளம்பெண் தற்கொலைக்கு முயற்ச்சி

மாடியில் இருந்து குதித்து பெண் ஒருவர்  தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் ஆதர்ஷ் நகர் காவல் நிலையத்திற்குட்பட்ட மஜ்லிஸ் பார்க் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தம்பதி வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் கணவருடன் ஏற்பட்ட சண்டையால் மனமுடைந்த மனைவி, மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அந்தப் பெண் கீழே நிறுத்தப்பட்டிருந்த ஸ்கூட்டர் மீது விழுந்து பலத்த காயமடைந்தார். இந்த சம்பவத்தின் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது. இது தற்போது வைரலாகிவருகிறது.

 

Tags :

Share via

More stories