முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  முன்னிலையில் பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க.வைச் சேர்ந்த  1000க்கும் மேற்பட்டடோர் தி.மு.க.வில் இணைந்தனர்.

by Editor / 06-02-2025 11:48:41pm
 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  முன்னிலையில் பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க.வைச் சேர்ந்த  1000க்கும் மேற்பட்டடோர் தி.மு.க.வில் இணைந்தனர்.

‘திருநெல்வேலி மாவட்ட திமுக நிர்வாகிகள் சந்திப்பு’நிகழ்ச்சியில் கலந்து கொள்ள  நெல்லை வந்துள்ள முதலமைச்சரும்,,திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில், திருநெல்வேலியில் இன்று (06-02-2025) மாலை, திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பா.ஜ.க.வைச் சேர்ந்த மாவட்ட தலைவர் ஏ.தயாசங்கர், மாவட்ட பொதுச்செயலாளர் வேல் ஆறுமுகம், மாநில பொதுக்குழு உறுப்பினர் வி.மீனாட்சிசுந்தர், மாவட்ட விவசாய அணி தலைவர் சி.முருகன், மாவட்ட சிறுபான்மை தலைவர் என்.இசக்கார் ராஜ்பால், மாவட்ட பொருளாதார பிரிவு தலைவர் எஸ்.சபரிமலை வாசன், மாவட்ட ஊடக பிரிவு தலைவர் எஸ்.மாரியப்பன், திருநெல்வேலி நகர் கிழக்கு மண்டல தலைவர் இ.இசக்கி அய்யப்பன், தச்சநல்லூர் வடக்கு மண்டல தலைவர் எம்.பிரேம்குமார், மானூர் மத்திய ஒன்றிய தலைவர் கே.ரவி, நெல்லை நகர் மண்டல முன்னாள் தலைவர் டாக்டர் சி.பொன்னம்பலவாணன், மாவட்ட விவசாய அணி ஐடி பிரிவு எம்.லெட்சுமணன், மாவட்ட ஓபிசி அணி செயலாளர்கள் ஏஆர்சுந்தராஜ், ஏ.அருண்செல்வம், மாவட்ட விவசாய அணி துணைத் தலைவர் பி.பாலன், மாவட்ட விவசாய அணி செயலாளர்கள் என்.ரூபன், எஸ்.நடராஜன், மாவட்ட தமிழ் வளர்ச்சி பிரிவு துணைத் தலைவர் ஆர்.கார்த்திக், மாவட்ட பொருளாதார பிரிவு துணைத் தலைவர் எம்.வெங்கடேஷ், மாவட்ட பொருளாதார பிரிவு செயலாளர்கள் எஸ்.ஆறுமுகம், ஏ.ஆர்.சேதுராமன், எஸ்.துரைசண்முகவேல், சி.செல்வராஜ், பி.லட்சுமணன்  மற்றும்

அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளரும் - திருக்குறுங்குடி பேரூராட்சி மன்ற தலைவரும் - கூட்டுறவு சங்க தலைவருமான இ.இலங்காமணி மற்றும் ச.மாணிக்கராஜா, எஸ்மணிகண்டன், எஸ்.இசக்கிதுரை, சு.வெள்ளைபாண்டி, எம்.மாரியப்பன், எம்.ஐகோர்ட் மகாராஜா, எஸ்.உதயகுமார், ஆர்.முத்துப்பாண்டி, வி.இசக்கிராஜ், வி.உதேஷ் உள்ளிட்ட 1000-க்கும் மேற்பட்ட பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. கட்சியினர்    தி.மு.க.வில் இணைந்தனர்.

அதுபோது  கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர். கே.என்.நேரு, திருநெல்வேலி கிழக்கு மாவட்டச் செயலாளர் இரா.ஆவுடையப்பன்,  திருநெல்வேலி மத்திய மாவட்டப் பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான்,  மற்றும்   நிர்வாகிகள் ஆகியோர் உடனிருந்தனர்.

 

Tags :  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  முன்னிலையில் பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க.வைச் சேர்ந்த  1000க்கும் மேற்பட்டடோர் தி.மு.க.வில் இணைந்தனர்.

Share via