5.53 கோடி சொத்து குவிப்பு வழக்கில் ஆ.ராசா-.சிபிஐ வழக்கு பதிவு

by Editor / 11-10-2022 10:42:38am
5.53 கோடி சொத்து குவிப்பு வழக்கில் ஆ.ராசா-.சிபிஐ வழக்கு பதிவு

முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராசா மீது கடந்த 2015 ஆம் ஆண்டு வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவிக்கப்பட்டதாக மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) வழக்கு பதிவு செய்தது..மேலும் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையையும்  தாக்கல் செய்தது. ஏழு ஆண்டுகள் பழமையான இந்த வழக்கின் விசாரணை முடிந்ததும், சமீபத்தில் சென்னையில் உள்ள சிபிஐ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஆ.ராசா மற்றும் ஐந்து பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகையை ஏஜென்சி தாக்கல் செய்தது. இறுதி விசாரணை அறிக்கையில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா ரூ.5.53 கோடி அளவுக்கு சொத்துக்களைக் குவித்ததாக குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories