ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை இன்று முதல் அமல்

by Editor / 01-07-2022 01:00:23pm
ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை இன்று முதல் அமல்

ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடை நாடு முழுவதும் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது .பிளாஸ்டிக் கழிவுகளை குறைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதன்படி பிளாஸ்டிக்கால் ஆன காது குடையும் குச்சிகள் தட்டுகள் ஸ்ட்ரா ஸ்வீட் பாக்ஸ்கள் அழைப்பிதழ் அட்டைகள் உள்ளிட்டவற்றை தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனை கண்காணிக்க மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் தேசிய கட்டுப்பாட்டு அறை நிறுவப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories