மேயர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை

கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரியின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று (ஏப்ரல் 18) சோதனை நடத்தி வருகின்றனர். மேயர் சுந்தரியின் கணவர் ராஜா, திமுக நகர செயலாளராக இருக்கிறார். இந்நிலையில், அவரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தி வருவதால் அங்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த வருமான வரித்துறை சோதனை நடப்பதாக மேயரின் கணவர் ராஜா கூறியுள்ளார்.
Tags :