காங்கிரஸ் எம்பி சந்தோக் சிங் சவுத்ரி மாரடைப்பால் மரணமடைந்த எம்.பி

by Staff / 14-01-2023 12:32:06pm
 காங்கிரஸ் எம்பி சந்தோக் சிங் சவுத்ரி மாரடைப்பால் மரணமடைந்த எம்.பி

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரைக்கிடையே சோக சம்பவம் நடந்தது. இந்த யாத்திரையில் பங்கேற்ற காங்கிரஸ் எம்பி சந்தோக் சிங் சவுத்ரி மாரடைப்பால் உயிரிழந்தார். பஞ்சாப் மாநிலம் ஃபில்லூரில் பயணம் செய்து கொண்டிருந்த போது மாரடைப்பு காரணமாக அவர் கீழே விழுந்தார். ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். தற்போது ஜலந்தர் எம்.பி.யாக உள்ளார். முன்னதாக காங்கிரஸ் ஆட்சியில் பஞ்சாப் அமைச்சராகவும் பணியாற்றினார்.
 

 

Tags :

Share via