15 ஆண்டுகள் வரி செலுத்தாத டிரம்பின் நிறுவனம்

by Staff / 14-01-2023 12:36:41pm
15 ஆண்டுகள் வரி செலுத்தாத டிரம்பின் நிறுவனம்

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்புக்கு சொந்தமான ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சுமார் 15 ஆண்டுகள் வரை வரி செலுத்தாததால், 1.61 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த தண்டனையை மன்ஹாட்டன் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஜுவான் மெர்ச்சன் வழங்கினார். இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக டொனால்ட் டிரம்பின் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். 2024ல் மீண்டும் அமெரிக்காவில் ஆட்சிக்கு வர முயற்சிக்கும் டிரம்பிற்கு இந்த வழக்குகள் கடும் சவாலாக இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories