ஆசிரியர்கள் மீது புகார் கொடுத்த 3ஆம் வகுப்பு மாணவன்
தெலங்கானா மாநிலம் மகபூப்பா நகர் மாவட்டத்திலுள்ள பையாரம் நகர காவல் நிலையத்திற்கு நேற்று அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு மாணவன் அணில் வந்தான்.
முக கவசம் அணிந்து கொரோனா விதிமுறைகளை கடைப்பிடித்து காவல் நிலையத்திற்கு வந்த அந்த சிறுவனை பார்த்த போலீசார் காவல்நிலையத்திற்கு வந்து இருப்பதற்கான காரணம் பற்றி கேட்டனர்.
அப்போது தன்னுடைய ஆசிரியர்களான சன்னி, வெங்கட் ஆகியோர் தன்னை அடிப்பதாக அவன் போலீசாரிடம் கூறினான்.
முக கவசம் அணிந்து காவல் நிலையத்திற்கு வந்ததுடன் தயக்கமில்லாமல் ஆசிரியர் அடிப்பதாக அணில் கூறிய குற்றச்சாட்டுகளை கேட்ட போலீசார் அவனை அழைத்து கொண்டு பள்ளிக்கு சென்றனர்.
அங்கு தன்னை அடித்த ஆசிரியர்கள் இரண்டு பேரையும் அந்த மாணவன் அடையாளம் காட்டினான். மாணவனை அடித்த ஆசிரியர்கள் இரண்டு பேருக்கும் இது போல் மாணவர்களை அடித்து துன்புறுத்த கூடாது என்று அறிவுரை கூறியதுடன்.
அந்த மாணவனுக்கும் அறிவுரை கூறிவிட்டு .இளம் கன்று பயம் அறியாது என்பது இந்த மாணவனை சேரும் என்றனர்.
Tags :













.jpg)

.jpg)

.jpg)

