தற்கொலைக்கு முயன்ற அண்ணணை காப்பாற்ற சென்ற தம்பியை அரிவாளால் வெட்டி கொலை செய்த அண்ணன்
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை அருகே காளியாபுரம் பகுதியைச் சேர்ந்த சோமநாதபுரத்தில் ரகுபதி மற்றும் தனது தம்பி திருமூர்த்தி (எ)செந்தில் ஆகிய இருவரும் அதே பகுதியில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மாலையில் ரகுபதி அவரது வீட்டில் குடும்பப் பிரச்சனை காரணமாக மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சித்ததாக கூறப்படுகிறது இவரைக் காப்பாற்ற இவரது தம்பி திருமூர்த்தி என்கிற செந்தில் அங்கு சென்ற பொழுது அரிவாளால் தம்பியை வெட்டியதால் திருமூர்த்தி (எ)செந்தில் கழுத்தில் இரத்த காயங்களுடன் மயங்கியதால் அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் 108 ஆம்புலன்ஸில் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது எனவே இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு வைக்கப்பட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார். கொலை செய்த நபர் (ரகுபதி) தற்கொலை முயற்சிக்கு மருந்து அருந்தியதாக கூறப்பட்டதால் போலீசார் அந்த நபரை சம்பவம் நடந்த இடத்திலிருந்து 108 ஆம்புலன்ஸ் மூலமாக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். மேலும், மேல் சிகிச்சைக்காக இரவு அங்கிருந்து கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.மேலும், ஆனைமலை காவல் நிலைய போலீசார் இக்கொலை சம்பவத்தை விசாரணை செய்து வருகின்றனர். கொலைச் சம்பவத்தால் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Tags : தற்கொலைக்கு முயன்ற அண்ணணை காப்பாற்ற சென்ற தம்பியை அரிவாளால் வெட்டி கொலை செய்த அண்ணன்



















