பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலப்பு: ஜி. கே. வாசன் அதிர்ச்சி

தமாகா தலைவர் ஜி. கே. வாசன் வெளியிட்ட அறிக்கையில், "திருவாரூர் காரியாங்குடி ஊராட்சி தொடக்கப்பள்ளி குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவுகள் கலந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மாணவர்களின் உயிரோடு விளையாடும் இச்செயல் கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் குடிநீரில் மனிதக் கழிவு கலப்பது தொடர்வது கவலையளிக்கிறது. குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்து கடும் தண்டனை வழங்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.
Tags :