அதிமுகவில் இருந்து ஐ.டி.விங் நிர்வாகி  விலகல்

by Editor / 16-06-2021 06:56:57pm
 அதிமுகவில் இருந்து ஐ.டி.விங் நிர்வாகி  விலகல்

 

சென்னை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளராக உள்ள அஸ்பயர் சுவாமிநாதன் அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 
அதிமுகவில் திறமைக்கு மதிப்பில்லை, தொலைநோக்கு பார்வையில்லை, வழிகாட்டுதல் இல்லை, வெளியேறுகிறேன் என அஸ்பயர் சுவாமிநாதன் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். தான் வெளியேறுவது தொடர்பாக அதிமுகவின் முதன்மை தலைவர்களிடம் கூறியிருந்த நிலையில் தற்போது அதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்வதாக அஸ்பயர் சுவாமிநாதன் அறிவித்துள்ளார்.
ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ஆலோசனை கூறும் ஆலோசகராகவும் முதலீட்டாளராகவும் உள்ள அஸ்பயர் சுவாமிநாதன். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தபோது அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப அணி செயலாளராக நியமனம் செய்யப்பட்டார், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தர்மயுத்தம் நடத்திய ஓ.பன்னீர் செல்வம் அணியில் இருந்து அவருக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார்.
அணிகள் இணைந்தபிறகு அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவில் சென்னை மண்டல செயலாளராக தொடர்ந்து செயல்பட்டு வந்த அஸ்பயர் சுவாமிநாதன் தற்போது அதிமுகவில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளார்.

 

Tags :

Share via
Logo