சம்பா அறுவடை பணிகள் தீவீரம்

by Editor / 17-02-2024 10:17:36am
 சம்பா அறுவடை பணிகள் தீவீரம்

திருவாரூர் மாவட்டம் முழுவதும்  ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டதன் காரணமாக குருவை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்ட நிலையில் பல்வேறு இடங்களில் தண்ணீர் பற்றா குறையினால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது இதனால் விவசாயிகள் நிவாரணம் வேண்டி பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அடுத்த கட்டமாக மாவட்டம் முழுவதும்  நாலு லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா மற்றும் தாளடி விவசாயப் பணியில் விவசாயிகள் மும்மரமாக ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது சம்பா அறுவடை பணிகள் என்பது தீவிரமடைந்துள்ளது குறிப்பாக திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி கட்டிமேடு ஆதிரெங்கம். இடும்பாவனம் . ஆலத்தம்பாடி விக்ரபாண்டியம்.புழுதிகுடி .திருப்பத்தூர். ராயநல்லூர். கொக்கலாடி.தலை காடு. சுந்தரபுரி. பாமணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இயந்திரங்களை கொண்டு அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் மும்முறமாக ஈடுபட்டு வருகின்றனர்.  

 

Tags : சம்பா அறுவடை பணிகள் தீவீரம்

Share via

More stories