விவசாயி வெட்டிப்படுகொலை.. துண்டாக்கப்பட்ட கைகள்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் இராமமூர்த்தி நகர், போவி காலனி பகுதியை சார்ந்தவர் வெங்கடேஷ். இவர் விவசாயியாக இருந்து வருகிறார். வெங்கடேஷுக்கு ஆவலஹள்ளி பகுதியிலும் விவசாய தோட்டம் இருந்துள்ளது. அங்கு மாடுகளை வளர்த்து வந்த நிலையில், இன்று காலை தோட்டத்திற்கு சென்றிருந்த வெங்கடேஷ் மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார்.
இதன்போது, வெங்கடேஷ் இருசக்கர வாகனத்தில் மாரகொண்டனஹள்ளி சாலையில் வந்துகொண்டு இருக்கையில், ஆட்டோ வெங்கடேஷின் வாகனம் மீது மோதியது. இதனால் நிலைதடுமாறி சாலையில் விழுந்த வெங்கடேஷை, ஆட்டோவில் இருந்து இறங்கி வந்த கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டி இருக்கிறது.
மேலும், ஒரு கை சம்பவ இடத்திலேயே துண்டாகியுள்ளது. இந்த கொலை சம்பவத்தில் வெங்கடேஷ் இரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, கொலை கும்பல் சம்பவ இடத்தில் இருந்து தப்பி செல்லவே, பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், வெங்கடேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
Tags :