உலக புத்தொழில் மாநாடு -2025-க்கான இலச்சினை வெளியீடு

தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் சார்பில் கோயம்புத்தூரில் நடைபெற உள்ள “உலக புத்தொழில் மாநாடு -2025” கான இலச்சினையை வெளியிட்டு, மாநாட்டிற்காக வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பு இணையதளத்தினை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், கூடுதல் தலைமை செயலாளர் அதுல் ஆனந்த், தலைமை செயல் அலுவலர் சிவராஜா ராமநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.
Tags :