தூய்மைப் பணியாளர்கள் மீது மோதிய லாரி.. 7 பேர் பலி

ஹரியானாவில் டெல்லி - மும்பை விரைவுச் சாலையில் நடந்த விபத்தில் 7 தூய்மைப் பணியாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 6 பெண்கள் மற்றும் ஒரு ஆண் என தெரியவந்துள்ளது. இன்று (ஏப்.26) அதிகாலை தூய்மைப் பணியாளர்கள் 10க்கும் மேற்பட்டோர் தூய்மைப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது நெடுஞ்சாலையில் வேகமாக சென்ற லாரி அவர்கள் மீது மோதியது. 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 4 பேர் படுகாயமடைந்தனர்.இது குறித்து போலீசார் விசாரணைமேற்கொண்டு வருகின்றனர்.
Tags :