பெட்ரோல் ஊற்றி தீவைக்கப்பட்டு பலியான தமிழரசன் உடலை வாங்க குடும்பத்தினர் சென்னைவிரைந்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த திருமால்பூர் பகுதியில் தமிழரசன் என்ற வாலிபர் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற சம்பவத்தில் உயிர் இழந்த வாலிபரின் குடும்பத்திற்கு அரசு வேலை 25 லட்ச ரூபாய் ரொக்க பணம் வழங்க வேண்டும் என கடந்த இரண்டு நாட்களாக போராட்டம் நடைபெற்று வந்த நிலையில் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி போராட்ட குழுவிடம் அழைத்து பேசி தமிழரசனின் தம்பிக்கு கல்விக்கு ஏற்றார் போல் அரசு வேலை மற்றும் அரசால் வழங்கப்படும் அனைத்து உதவிகளையும் அதிகாரிகள் வாயிலாக நேரடியாக அவர்களுக்கு குடும்பத்திற்கு சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும் என வாய்மொழி உறுதி அளித்ததாக கூறப்படும் நிலையில் மூன்றாம் நாள் நடைபெறவிருந்த போராட்டம் கைவிடப்பட்டதாக போராட்டக் குழு சார்பாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் தமிழரசனின் உடலை வாங்க அவரது குடும்பத்தினர் சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனை விரைந்துள்ளனர்
Tags : பெட்ரோல் ஊற்றி தீவைக்கப்பட்டு பலியான தமிழரசன் உடலை வாங்க குடும்பத்தினர் சென்னைவிரைந்தனர்.