லண்டன் போயிட்டு வந்த பிறகு அண்ணாமலை ஏன் இப்படி ஆனார்-திருமாவளவன் 

by Editor / 26-12-2024 06:13:23pm
லண்டன் போயிட்டு வந்த பிறகு அண்ணாமலை ஏன் இப்படி ஆனார்-திருமாவளவன் 

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, “திமுக ஆட்சி கலையும் வரை செருப்பு போட மாட்டேன்.நாளையில் இருந்து 48 நாட்கள் விரதம் இருக்கப் போகிறேன். பிப்ரவரி மாதம் ஆறுபடை வீடுகளுக்குச் சென்று முருகனிடம் முறையிடப் போகிறேன்,நாளை காலை என் வீட்டுக்கு வெளியே நின்று எனக்கு நானே சாட்டையடி கொடுக்கப் போகிறேன்.என -தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம்தெரிவித்த நிலையில்  இதுகுறித்து கருத்து தெரிவித்த விசிக தலைவர் திருமாவளவன், “அண்ணாமலை பரபரப்பு அரசியல் செய்ய விரும்புகிறார். அதிமுக எதிர்க்கட்சி இல்லை, பாஜக தான் எதிர்க்கட்சி என காட்ட நினைக்கிறார். லண்டன் போயிட்டு வந்த பிறகு அண்ணாமலை ஏன் இப்படி ஆனார் என தெரியவில்லை" என்றார்.

 

Tags : லண்டன் போயிட்டு வந்த பிறகு அண்ணாமலை ஏன் இப்படி ஆனார்-திருமாவளவன் 

Share via