கந்துவட்டி கேட்டு மிரட்டியவர் மீது வழக்குபதிவு--மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை.
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சு கிராமம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மருங்கூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் மருங்கூர் அம்மன் நகர் பகுதியைச் சேர்ந்த அருள்ராஜ் என்பவரது மனைவி மீது அதிகமான வட்டி பணம் கேட்டு மிரட்டல் விடுத்ததாக அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் கந்து வட்டி தொடர்பான தகவல்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களை நேரடியாகவோ அல்லது 8122223319 என்ற எண்ணிற்க்கோ தகவல் அளிக்கலாம். கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
Tags : கந்துவட்டி கேட்டு மிரட்டியவர் மீது வழக்குபதிவு--மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை



















