ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோரை மூன்றாவது வரிசையில் அமர வைத்தது...

by Admin / 27-01-2026 09:30:00am
ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோரை மூன்றாவது வரிசையில் அமர வைத்தது...

ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோரை மூன்றாவது வரிசையில் அமர வைத்தது. எதிர்க்கட்சித் தலைவர்களுக்கான நெறிமுறைகளை மீறுவதாகவும்  இது திட்டமிட்ட அவமதிப்பு என்றும் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இருப்பினும் முன்னுரிமை பட்டியலின் அடிப்படையிலேயே இருக்கைகள் ஒதுக்கப்பட்டதாக அரசு தரப்பு விளக்கம் அளித்துள்ளது .குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற அட் ஹோம் வரவேற்பு நிகழ்ச்சியின் போது ராகுல் காந்தி பாரம்பரிய வடகிழக்கு பட்கா அணிய மறுத்ததாக பாஜக குற்றம் சாட்டி உள்ளது. குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இரு முறை கோரிக்கை விடுத்தும் அவர் அதனை அணியவில்லை என்று பாஜக செய்தி தொடர்பாளர் ஷேஷாத் பூனவல்லா விமர்சித்துள்ளார். ராகுல் காந்தி வடகிழக்கு கலாச்சாரத்தையும் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த குடியரசு தலைவரையும் அவமதித்து விட்டதாக பாஜக தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த குற்றச்சாட்டுகள் ஒரு போலி நாடகம் என்று காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது. மேலும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் அந்த பட்காவை அணியவில்லை என்று சுட்டிக்காட்டி பாஜகவின் விமர்சனத்தை அரசியல் திசைதிருப்பல் என சாடி உள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo