மனநலம் பாதித்த பெண் பலி

விழுப்புரத்தில் மனநலம் காப்பகத்தில் தவறி விழுந்த பெண் இறந்தார். திருச்சி மாவட்டம், உறையூர் அடுத்த சமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அருணாசலம் மனைவி மீனா, 51; மனநலம் பாதித்தவர். இவர், விழுப்புரம், விராட்டிக்குப்பத்தில் உள்ள மனநல காப்பகத்தில் இருந்து வந்தார். கடந்த 2ம் தேதி காப்பகத்தில் மீனா கால் இடறி கீழே விழுந்தார். தலையில் பலத்த காயமடைந்த அவர் திருச்சியில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் நேற்று முன்தினம் இறந்தார். விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
Tags :