10 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது: இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல். தேனி, விருதுநகர், மதுரை, தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் கனமழையும், சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழையும் பெய்யக்கூடும். நாளை தஞ்சை, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட 18 மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது.
Tags :