டிச-26 அதிமுக பொதுக்குழு கூடுகிறது

by Staff / 08-12-2023 02:56:03pm
டிச-26 அதிமுக பொதுக்குழு கூடுகிறது

அதிமுக பொதுக்குழு டிச-26ம் தேதி கூடுவதாக தலைமை அறிவித்துள்ளது.இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில்; அதிமுக, செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், வரும் 26.12.2023 அன்று, காலை 10.35 மணிக்கு, சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில், கழக அவைத் தலைவர் டாக்டர் அ. தமிழ்மகன் உசேன் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித் தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு அனுப்பப்படும் அழைப்பிதழுடன் தவறாமல் வருகை தந்து, கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo