கேரளாவின் அன்பிற்கு நன்றி - முதல்வர் ஸ்டாலின்

தென் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக பொதுமக்களில் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்களுக்கு உதவும் வகையில் அரசு தரப்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் தன்னார்வலர்களும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் கேரளா மாநிலத்தின் சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த வீடியோ ஒன்றை பகிர்ந்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் 'கேரளா சகோதர்களின் அன்பிற்கு நன்றி' என மலையாளத்தில் பதிவிட்டுள்ளார்.
Tags :