பிறந்தநாளில் 550 கேக் வெட்டி கொண்டாடிய நபர்

மும்பையை சேர்ந்த சூர்ய-ரதுரி என்பவர் தனது பிறந்தநாளில் 550 கேக்குகளை வெட்டிக் கொண்டாடிய சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் மும்பை காந்திவலியை சேர்ந்த சூர்யா ரதுரி என்பவர் கேக் வெட்டி கொண்டாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சாதாரணமாக பலர் ஒன்று அல்லது அவர்களது வயது மற்று வசதிக்கு ஏற்ப கேக் வெட்டுவதை பார்த்துள்ளோம்.
ஆனால் சூர்யா ரதுரி மொத்தம் 550 கேக்குகளை இரண்டு கத்தியால் வெட்டி பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். மூன்று நீண்ட டேபிள் மீது வைக்கப்பட்டிருந்த அந்த 550 கேக்குகளை இரண்டு கைகளிலும் இரு கத்தியை பிடித்து கொண்டு வெட்டி முடித்துள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Tags :