மழை வெள்ளத்தால் 100 கோடி ரூபாய் மதிப்பில் உப்பளங்கள் சேதம்

by Staff / 23-12-2023 05:28:34pm
மழை வெள்ளத்தால் 100 கோடி ரூபாய் மதிப்பில் உப்பளங்கள்  சேதம்

தூத்துக்குடி மாவட்டம் மற்றும் மாநகர பகுதிகளில் கடந்த 17 18 ஆம் தேதிகளில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு சேதங்கள் ஏற்பட்டுள்ளன குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தின் முக்கிய தொழிலாளக கருதப்படும் உப்பளங்கள் அதிக அளவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது

தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி திருச்செந்தூர் சாலை, கோவங்காடு, கோவளம், புல்லா வெழி, ஆறுமுகநேரி ஆகிய பகுதிகளில் உப்பளங்களில் உற்பத்தி செய்யப்பட்டு தேக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பிலான 5 லட்சம் டன் உப்பு மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. இந்த ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட சுமார் 60% உப்பு இந்த மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது மேலும் மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கான ஏக்கர் உப்பளங்கள் மழை நீரில் மூழ்கியுள்ளது.

இதன் காரணமாக உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் உப்பள தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது இதற்கு மாவட்ட நிர்வாகம் முறையாக கணக்கெடுப்பு நடத்தி உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உப்பள உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் கோரிக்கையாக உள்ளது

 

Tags :

Share via