"NDA கூட்டணியில்  சின்ன சின்ன பிரச்னைகள் உள்ளன-அண்ணாமலை 

by Staff / 04-09-2025 11:29:47pm

ஓபிஎஸ், டிடிவி.தினகரன் தங்களது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, "NDA கூட்டணியில் பிரச்னைகள் இல்லையென சொல்லவில்லை. சின்ன சின்ன பிரச்னைகள் உள்ளன. அவை களையப்படும் என நம்புகிறேன். ஓபிஎஸ், டிடிவி இருவருடன் மிகவும் நெருக்கமாக நான் பேசியுள்ளேன். இருவருமே தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்வர் என நம்புகிறேன்”மேலும் வேலைப்பளுவால்தான் என்னால் டெல்லி மீட்டிங்கிற்கு செல்ல முடியவில்லை. கட்சித் தலைவர்களுக்கும், அமித்ஷா அவர்களுக்கும் முறையாக இதை தெரிவித்தேன். அவர்களும் பெருந்தன்மையோடு ஏற்றுக்கொண்டனர். என்னை பற்றி தவறாக பேசுபவர்களுக்கெல்லாம் பதில் சொல்லி என் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை" என்று செய்தியாளர் சந்திப்பில் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

 

Tags : "NDA கூட்டணியில்  சின்ன சின்ன பிரச்னைகள் உள்ளன-அண்ணாமலை 

Share via