தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் இறுதி பட்டியல் வெளியானது. 

by Editor / 14-03-2025 07:04:15am
தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் இறுதி பட்டியல் வெளியானது. 

தமிழக வெற்றிக் கழகத்தில் 120 மாவட்ட செயலாளர்களை அறிவித்து அக்கட்சியின் தலைவர் விஜய் உத்தரவு பிறப்பித்திருந்தார். நிர்வாக வசதிக்காக த.வெ.க. 120 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு மாவட்டத்திற்கு மாவட்ட செயலாளர், இணை செயலாளர், பொருளாளர் என 15 பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இந்நிலையில் இறுதிக்கட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியலை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேற்று (13ஆம் தேதி) வெளியிட்டார்.

இதில், தென்சென்னை மேற்கு மாவட்ட செயலாளராக சபரிநாதன் என்பவரை நியமித்து அறிவிப்பு வெளியானது. இவர் தவெக தலைவர் விஜயின் உதவியாளரும், முன்னாள் ஓட்டுநருமான ராஜேந்திரனின் மகன் என்பது தெரியவந்துள்ளது. அவருக்கு கட்சியில் மாவட்ட பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

 

Tags : தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் இறுதி பட்டியல் வெளியானது. 

Share via