அத்து மீறிய எம். எல். ஏ: நடவடிக்கை எடுக்காத காவல்துறை

மஹாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியில் ‘ ஹர் ஹர் மகாதேவ்’ திரைப்படம் திரையிடப்பட்ட மாலில் எம். எல். ஏ ஜித்தேந்திர அவ்ஹாத் மற்றும் 100 க்கும் மேற்பட்ட அவரது பணியாளர்கள் அத்துமீறி நுழைந்துள்ளனர். அவர்கள் ஒன்று சேர்ந்து வலுக்கட்டாயமாக அந்த திரைப்படத்தை திரையிட எதிர்ப்பு தெரிவித்து படத்தை மூடியுள்ளனர். மேலும் அங்கு வந்திருந்த மக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இவர்கள் மீது வர்தக் நகர் காவல் நிலையத்தில் வழக்கு ப் பதியப்பட்டது . ஆனால் தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இப்படம் மராத்திமொழியில் உருவான முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :